டெல்லி:

பரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு சபரிமலை செல்ல வந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாயை, கேரள மக்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறி விடாமல் முற்றுகையிட்ட நிலையில், தற்போது மீண்டும் வரும் 16ந்தேதி சபரிமலைக்கு செல்கிறேன் என்று கூறி பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து பல பெண்கள் கோவிலுக்கு வர முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு அய்யப்பன் பக்தர்களிடையே கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு கோவிலுக்குள் நுழைய முயன்ற பல பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பார் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், ஒருசில பெண்கள் காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்தஆண்டு, பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் தனது குழுவினருடன் அய்யப்பன் கோவிலுக்குள்  நுழைவேன் என்று சவால் விட்ட நிலையில், அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாதபடி, கேரள மக்களும், அய்யப்பன் பக்தர்களும் முற்றுகையிட்டதால், அவர் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது, சபரிமலை விவகாரத்தில், மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதி மன்றம் முடிவெடுக்க முடியாமல், 7பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கின் சாராம்சத்தை அனுப்பி உள்ள நிலையில், பழைய நிலையே தொடரும் என்று கூறி உள்ளது.

இது அய்யப்ப பக்தர்களிடையே  மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, சபரிமலைக்கு பெண்கள் வர முயற்சித்தால் அவர்களை தடுப்போம் என்று கேரள மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இந்த நிலையில்,வரும் 16-ம் தேதி சபரிமலை செல்கிறேன்; அங்கு நான் உள்பட பெண்களை அனுமதிக்க வேண்டும் சமுக ஆர்வலலபன  திருப்தி தேசாய் வலியுறுத்தி உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரை சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

திருப்தி தேசாயின் இந்த அறிவிப்பு கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.