டில்லி,

ழைய ரூபாய் நோட்டு மாற்ற பொதுமக்களை ஏன் ரிசர்வ் வங்கி அனுமதிக்க வில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு குறித்து கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து செல்லாத 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுளை டிசம்பர் 30ந்தேதிகளுக்குள்  வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

மேலும், அதன்பிறகும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை தகுந்த ஆதாரத்துடன் மார்ச் 31ந்தேதி வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ள லாம் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில்  93 சதவிகித நோட்டுக்கள்  டிசம்பர் 30ந்தேதிக்குள் வங்கிகள் மூலம்  மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.  மேலும் 7 சதவிகித பணம் மாற்றப்படாமல் பொதுமக்களிடம் உள்ளது என்றும் கூறியிருந்தது.

இதற்கிடையில், பழைய நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கிக்கு வருபவர் களிடம் பணத்தை வாங்க ரிசர்வ் வங்கி மறுத்து வருகிறது. இது பொதுமக்களி டையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பணம் வாங்க மறுப்பதை எதிர்த்து, பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது,

 

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மார்ச் 31-ந்தேதி வரை மத்திய அரசு அவ காசம் கொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாக்குறுதிக்கு ஏற்ப பலரும் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலவில்லை என்கிறார்கள்.

மார்ச் 31-ந்தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏன் அனுமதிக்க கூடாது? இதுபற்றி மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 10-ந்தேதி நடைபெறும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.