இந்தியாவின் தீபா கார்மார்கர் உட்பட 20 பெண் சாதனையாளர்களை கவுரவித்த பார்பி பொம்மை நிறுவனம்

Must read

நியூயார்க்:

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மார்கர் உட்பட 20 பிரபலங்களை பொம்மையாக வடித்து பெருமை படுத்தியிருக்கிறது 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் பார்பி.


கடந்த 60 ஆண்டுகளாக பார்பி பொம்மைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று வருகின்றன. இதுவரை 200-க்கும் மேற்பட்ட பிரபலங்களை பொம்மையாக வடித்து பெருமை படுத்தியிருக்கிறது பார்பி பொம்மை நிறுவனம்.

சாதித்த பெண்கள், இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பெண்களின் உருவ பொம்மையை வெளியிட்டு பெருமை படுத்தி வருகிறது.

பெண்களுக்கு உலகம் தெரியாமல் இருக்கக் கூடாது, கனவு இல்லாமல் இருக்கக் கூடாது என்று பார்ப்பி நம்புகிறது. இப்போது பார்பி பொம்மை தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதனையொட்டி, சர்வசேத பெண்கள் தினத்தில் 18 நாடுகளைச் சேர்ந்த 14 மொழிகள் பேசும் 20 சாதனை பெண்களை பொம்மையாக வடித்து பெருமைபடுத்தியிருக்கிறது பார்பி.

இந்தியாவின் முதல் பெண் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கார்மாக்கரும் இந்த பொம்மை பட்டிலில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கித் தந்து பெருமை படுத்தியவர். இவரது உருவம் கொண்ட பொம்மை இந்தியாவில் விற்பனை சக்கைபோடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க நடிகை, பெண் கல்வி ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்ட யாரா ஷாகிதி, அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இசைத்துறையில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் பாப் இசை பாடகர் கெலேசா பெல்லாரினி, இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் மற்றும் சமூக ஆர்வலர் அட்வோவா அபோவா, கால் முறிவு ஏற்பட்டும் விடாத முயற்சியால் சிறந்த சைக்கிள் வீராங்கனையாக இருக்கும் ஜெர்மனியின் கிறிஸ்டினா வோகெல், கிரீஸை சேர்ந்த நாசா விஞ்ஞானி எலினி அன்டோனியதடாவ், இத்தாலியின் சிறந்த சமையல் நிபுணர் ரோசனா மர்ஜியாலே, ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர் இடா பட்ரோஸ், துருக்கியின் எழுத்தாளர், பெண்கள் உரிமை பேராளி குல்சே பிர்செல், கனடாவைச் சேர்ந்த நாட்டிய கலைஞர் டெஸா விர்ச்யூ, உலகிலேயே உயர்ந்த மலையில் ஏறி சாதித்த மெக்ஸிகோவைச் சேர்ந்த கர்லா வீலோக், பெருவைச் சேர்ந்த பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வரும் மரியானா கோஸ்தா, ஜப்பானில் தொலைக்காட்சியில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை தகர்த்த டிட்சூகோ குரோயானகி, சீனாவில் அழகுக் கலையை வளர்த்த சென்மான், நியூசிலாந்தைச் சேர்ந்த விளையாட்டு தொடர்பான செய்தியாளர் மேலொடி ராபிசன், போலந்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஐவோனா ப்ளெசார்சிக், ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீரர், டிவி தொகுப்பாளினி லியாசன் அல்பெர்ட்டோவ்னா, பிரேசிலைச் சேர்ந்த சிறந்த பெண் விளையாட்டு வீரர் மாயா கபீயிரா ஆகியோரின் பார்பி பொம்மைகள் கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article