டெல்லி: ஆம்னி பேருந்து விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதானவிசாரணையைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்க மறுத்ததுடன், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
திமுக அரசு அவசரகதியில் திறந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் தென்மாவட்ட மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்துதான் செல்ல வேண்டும் என மிரட்டியதால், அதில் முன்பதிவு செய்திருந்த பலர் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். இதை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
சென்னை மக்கள் கிளாம்பாக்கம் செல்ல போதிய வசதிகள் செய்யாத நிலையில், மக்கள் வெளியூர்களுக்கு செல்ல கடும் சிரமப்பட்டனர். இது தொடர்பான விமர்சனங்கள், வீடியோக்கள் சமுக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து, வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிவரை விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். ஆனால், அந்த நடைமுறையும் தொடராமல் கண்துடைப்பாகவே இருந்தது.
இதற்கிடையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என தமிழக போக்குவரத்து ஆணையர் கடந்த ஜன. 24-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்தவழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ‘‘இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைத்துள்ள கேரேஜ்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், சூரப்பட்டு, போரூர் டோல்கேட்டுகளில் மட்டுமே பயணிகளை இறக்கி, ஏற்றலாம் என்றும், அதேபோல கண்டிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குள் செல்லாமல் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடாது எனவும் கூறி வழக்கு விசாரணையை வரும் ஏப்.15-க்கு தள்ளி வைத்திருந்தார். இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.
ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. தமிழ்நாடு அரசு. இதையடத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்தும். கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க கோரியும், , போக்குவரத்து ஆணையரின் உத்தரவை எதிர்த்தும்உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் புறப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளார். அதற்குள் இந்தவிவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும். ஏப்.15-ம் தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என்றனர்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், பொதுமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவில் தலையிட முடியாது என தெரிவித்து தமிழ்நாடு அரசின் வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழ்நாடு, நேற்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் சூரப்பட்டு டோல்கேட், போரூர் டோல்கேட் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப் படும்’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது