சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி  செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் மொத்த பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் இதுவரை  653 பேருக்கு ஒமிக்ரான தொற்று பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகி இருந்து. இந்த நிலையில், இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளது.

ஒமிக்ரான் பாதிக்கப்பட்டுள்ளவர்களில், ஏற்கனவே பலர் ஒமிக்ரான் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில்,  5 பேர் மட்டுமே கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில், 118 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டிருப்பதாகவும் அவர்களின் சோதனை முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் வந்த சோதனை முடிவுகளில், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த  7 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும்  ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 6 பேர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.