டில்லி
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 143 ஆகி உள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவிலும் நுழைந்து நாடெங்கும் பல மாநிலங்களில் பரவி வருகிறது. நேற்று முன் தினம்வரை இந்தியாவில் தமிழக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 113 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது அது கிடுகிடு என மேலும் அதிகரித்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 143 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் தெலுங்கானாவில் 12 பேர், மகாராஷ்டிராவில் 9 பேர், கர்நாடகாவில் 6 பேர், கேரளாவில் 4 பேர் என 30 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று கேரளாவில் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்மேல் இருவர் திருவனந்தபுரத்தையும் ஒருவர் மலப்புரத்தையும் மற்றவர் திருச்சூரையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்திய மாநில அரசுகள் ஒமிக்ரான் தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ள நிலையில் வேகமாகத் தொற்று பரவுவது மக்களைப் பீதியில் ஆழ்த்தி உள்ளது.