ஸ்ரீநகர்

ரியானாவில் சாமியார் கைதுக்கு பின் நடக்கும் வன்முறையை கட்டுப்படுத்தாத அரசை ஓமர் அப்துல்லா கண்டித்துள்ளார்.

அரியானாவில் சாமியார் ராம் ரஹிம் கைதுக்குப் பின் நடக்கும் வன்முறைகளை நாடெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் கண்டித்து அறிக்கை விடுகின்றனர்.   ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தனது டிவிட்டர் பக்கத்தில் அரசுக்கு இதை கட்டுப்படுத்தும் பொறுப்பு ஏதும் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் “மிளகாய் குண்டுகள், மிளகு ஏவுகணைகள், தோல் துப்பாக்கிகள் எல்லாம் காஷ்மீர் மக்களை காப்பாற்ற மட்டும் தானா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.    இன்னொரு பதிவில் பிரதமர் உடனடியாக அரியானா முதல்வரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனவும்,  முதல்வருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது என்பதை சிறிதும் அறியாதவராக உள்ளார் எனவும் ஓமர் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி காவல்துறை கலவரம் கட்டுக்குள் இருப்பதாக கூறி வருவதையும்,  ஆனால் கலவரக்காரர்கள் போலீசின் வாகனங்களையும் தாக்குவது குறித்தும், தனது கவலையை தெரிவித்துள்ளார்.    உலகே அறிந்த ஒரு விஷயத்தில் இவ்வளவு சமாளிப்பு ஏன் என கேட்டுள்ளார்.