மஸ்கட்:

2017ம் ஆண்டில் புலம்பெயர்ந்தவருக்கான உரிமம் வழங்கும் கட்டணம் மூலம் 310 மில்லியன் ரியால் நிதி திரட்ட ஓமன் அரசு முடிவு செய்துள்ளது.
அந்நாட்டின் 2017ம் ஆண்டு பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் வரி மற்றும் வருவாய் குறித்து நிதியமைச்சகம் தெரிவித்துள்ள கருத்து விபரம்:

ஓமன் நாட்டின் குடிமகன் அல்லாத தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான உரிமம் வழங்குதல் மூலம் 310 மில்லியன் ரியால் நிதி திரட்டப்படும். கடந்த 2016ம் ஆண்டு பட்ஜெட்டில் ஆண்டு மொத்த வருவாய் 8.7 பில்லியன் ரியாலாகும். இதை இந்த ஆண்டு 18 சதவீதம் உயர்த்தும் வகையில் திட்டங்கள் அறிவி க்கப்படுகிறது. பெட்ரோல் சாராத வருவாய் என்பது மொத்த வருவாயில் 30 சதவீதமாக, அதாவது 2.59 பில்லியன் ரியால் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. புலம்பெயர்ந்த

தொழிலாளர்கள் பணியமர்த்துவதற்கான விசா கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்படும் என்று கடந்த நவம்பரில் அந்நாட்டு மனித ஆற்றல் துறை அறிவித்திருந்தது.
தற்போதைய நிலவரப்படி தனியார் நிறுவனங்கள் ஒரு பணி விசா புதிதாக எடுக்கவோ அல்லது புதுப்பி க்கவோ 301 ரியால் செலுத்த வேண்டி வரும். ஏற்கனவே 201 ரியால் வசூலிக்கப்பட்டு வந்தது. அதே போல் வீட்டு பணி, ஓட்டகம் மேய்த்தல், பண்ணை வேலை ஆகியவற்றுக்கான விசா கட்டணமும் மாற்றி அமை க்கப்பட்டுள்ளது.

வீட்டு வேலைக்கு 3 தொழிலாளர்கள் வரை ஒரு தொழிலாளிக்கு 141 ரியால், 4வது தொழிலாளிக்கு 241 ரியால் செலுத்த வேண்டும். இதே 4 பேரது விசாவை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பிக்க வேண்டும் என்றால் ஒரு தொழிலாளிக்கு தலா 241 ரியால் செலுத்த வேண்டும். அதேபோல் பண்ணை மற்றும் ஓட்டக பராமரிப்பு பணிக்கு 3 தொழிலாளர்கள் வரை தலா 201 ரியாலும், 4வது தொழிலாளிக்கு 301 ரியாலும் செலுத்த வேண்டும். 2 ஆண்டுகள் புதுப்பித்தலுக்கு 4 பேருக்கும் தலா301 ரியால் செலுத்த வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்துக்கு மாற்றுதல், ஒரு நிறுவனத்தில் வேறு பணிக்கு மாற்றும் தகவல்களை பதிவு செய்ய 5 ரியால் கட்டணம் செலுத்த வேண்டும். இது குறித்த அறிவிப்பு விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாத கணக்கெடுப்பின் படி ஓமனில் உள்ள மொத்த மக்கள் தொகை 45 லட்சத்து 46 ஆயிரத்து 830 ஆகும். இதில் 24 லட்சத்து 65 ஆயிரத்து 768 பேர் ஓமன் குடியுரிமை பெற்றரர்கள். இதர 20 லட்சத்து 81 ஆயிரத்து 62 பேர் புலம் பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.