ரியோ: 
லிம்பிக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள  நிலையில் இந்திய மத்தயுத்த வீரர் யோகேஸ்வர் தத் மூலம் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
மல்யுத்த வீரரான தத், 2012 ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஊக்கமருந்து பிரச்சினையில் நர்சிங் யாதவ் வெளியேறிய நிலையில், தத்தின் மேல் அனைவரின் எதிர்ப்பார்ப்பும் திரும்பியுள்ளது. 33 வயதான தத், இதுவரை பல பதக்கங்களை குவித்துள்ளார். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியா மற்றும் காமென்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
yogeshwar-759
தத் கலந்துக்கொள்ளும் போட்டி இன்று இந்திய நேரப்படி 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்களான இத்தாலியினெ பிரான்க் சமீசோ மற்றும் ரஷியாவின் சோஸ்லோ ரோமனோவை எதிர்க்கொள்கிறார். தத் பதக்கம் வெல்வாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னும் கோல்ப் வீராங்கனை அதீதி அசோக், ஆடவர் மாரத்தான் வீரர்கள் கோபி, ராம் மற்றும் நீதேந்தர் சிங் மூலமும் பதக்கம் வர வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.