ரியோ டி ஜெனிரோ :
நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து அரை இறுதியில் வெற்றி பெற்ற இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் காரணமாக அவர் பதக்கத்தை உறுதி செய்தார்.
நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொசோம்பி ஒக்குகாராவை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.. முதல் சுற்றில் 21-19 செட் கணக்கிலும், இரண்டாவது சுற்றில் 21- 10 என்ற செட் கணக்கிலும் ஜப்பான் வீராங்கனையை பி.வி.சிந்து வீழ்த்தினார்.
சிந்து, ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது.
இன்று இரவு நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர் கொள்கிறார். இதில், சிந்து வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது.
இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
ஒலிம்பிக் பேட்மின்டன் இறுதி போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ரியோ ஒலிம்பிக்சில் நேற்று ஒரே நாளில் இந்திய வீராங்கனைகள் 2 பதக்கங்களை உறுதி செய்து, மகத்தான சாதனை படைத்துள்ளனர். மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்ற நிலையில், சிந்து அடுத்த பதக்கத்துக்கு அச்சாரம் போட்டிருப்பது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இன்றைய இறுதி போட்டி காண இந்தியர்கள் மட்டுமின்றி உலக பேட்மின்டன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இன்றைய போட்டியில் சிந்து உலகின் நம்பர்-1 வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வெல்வார் என்று நம்பிக்கை கொள்வோம்.