சென்னை:

ரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

றத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் அரசு பேருந்து போக்குவரத்து இன்று துவங்கியுள்ளது. இந்நிலையில் பல்லவன் பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், செப்.15 வரை பழைய பாஸ் செல்லும் என்றும், அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாவட்ட எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் பேட்டியளித்திருக்கிறார்.

கொரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து மாவட்டத்திற்கு உள்ளாக இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.