திருவண்ணாமலை
குழந்தைக் கடத்தல் காரர்கள் என தவறாக சந்தேகப்பட்டு பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் மூதாட்டி ஒருவ்ர் மரணம் அடைந்தார்.
திருவண்ணாமலி மாவட்டத்தில் உள்ளது அத்திமூர். இந்தப் பகுதிக்கு காரில் 5 பேர் கொண்ட ஒரு குழு வந்துள்ளது. இவர்கள் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு சாக்லேட் உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி உள்ளனர். இதனால் இதை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இனிப்புக்களை கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றவர்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர். அவர்கள் குழந்தைகளை கடத்துபவர்கள் என்ற தவறான சந்தேகத்தால் கண்மூடித் தனமாக தாக்கி உள்ளனர். இதனால் அந்த காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தவர்களில் மூதாட்டி ஒருவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.
இதற்குள் காவல்துறையினருக்கு தகவல் தெரிந்து அவர்கள் விரைந்து வந்து மற்றவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில் காரில் வந்தவர்கள் பிரார்த்தனைக்காக திருவண்ணாமலை வந்துள்ளதும் பிரார்த்தனையின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியதும் தெரிய வந்துள்ளது.