மதுரை:

றைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வரின் மகனுமான மு.க.அழகிரி தனது தற்போதைய நிலை குறித்து புலம்பி உள்ளார்.  திமுகவினரே தன்னை மறந்து விட்டனர் என்று வேதனையுடன் கூறி உள்ளார்.

மறைந்த கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி,  திமுக தலைவராக இருந்தபோது, தென்மண்டல திமுக பொறுப்பாளராக பதவி வகித்தார். கருணாநிதி நோய்வாய்ப்பட்டு, மு.க.ஸ்டாலின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கட்சியில் இரு ஓரங்கட்டப்பட்டவர், பின்னர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி கட்சியில்  இருந்தே நீக்கப்பட்டார்.

மு.க.அழகிரி நீக்கத்துக்கு காரணமாக  குடும்பத்தில் எழுந்த பதவி, சொத்து மற்றும் பொருளாதார ரீதியிலான சண்டை என்று கூறப்பட்டது. இருந்தாலும் கருணாநிதி மறைக்குப் பிறகு மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அழகிரியில் கட்சியில் சேர்க்காமல், தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் ஸ்டாலின்.

இந்த நிலையில், மதுரையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று, மணமக்கள் வாழ்த்தி பேசிய அழகிரி, தொடர்ந்து பேசும்போது,  நன்றி மறப்பது என்பது இப்போது எல்லோருக்கும் சாதாரண விஷயம் ஆகிவிட்டது. அதற்கு நானே எடுத்துக்காட்டாக இருக்கிறேன் என்றவர்,  தன்னுடன் நீண்ட காலமாக பழகியவர்கள்கூட  என்னை சந்தித்து பேசுவதை தவிர்த்து வருகின்றனர். . ஆனால், எ அதிமுகவைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர்…. இது வேதனை தெரிவித்தவர்,  இந்த நிலைமை எப்போது மாறும் என தெரியவில்லை என்றார்…

தொடர்ந்து பேசியவர், சிலர் மட்டும்தான் கருணாநிதியின் பிள்ளைகள் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்…  நானும் கருணாநிதியின் மகன்தான்;  என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்….  நான் நினைத்ததை சாதிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகம் நன்றாக இருக்க நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்றார்.