கோவை : வாய்க்கால் கரையில் வீசப்பட்ட காலாவதியான சாக்லெட்டுகள்

Must read

கோயம்பத்தூர்

கோயம்பத்தூர் குனியமுத்தூர் அருகில் உள்ள ராஜவாய்க்கால்  கரையில் மூட்டை மூட்டையாக காலாவதியான சாக்லெட்டுக்கள் மற்றும் மிட்டாய்கள் வீசப்பட்டுள்ளன.

கோயம்புத்தூரில் உள குறிச்சிக்குளத்துக்கு ராஜவாய்க்கால் வழியாக நீர் வருகிறது.    இந்த நீர்ப்பாதை முளட்புதர்களால் அடைந்துள்ளது.   குறிச்சிக் குளம் பாதுகாப்பு இயக்கம் என்னும் தொண்டு நிறுவனம் இந்த முட்புதர்களை அகற்றி வருகிறது.   அப்போது இந்த இயக்கத்தினர்  கால்வாய்க்கரையில் சுமார் 30 மூட்டைகள் வீசப்பட்டதை கண்டுள்ளனர்.

அந்த மூட்டைகளை பரிசோதித்ததில் அதில் காலாவதியான சாக்லெட்டுகள், மிட்டாய்கள், ஜாம்,  குழந்தைகளுக்கான மருந்துகள் ஆகியவை இருந்துள்ளன.   இது குறித்து அந்த இயக்கத்தை சேர்ந்த தீபம் சுவாமிநாதன், “குறிச்சிக் குளத்துக்கு வரும் நீர் வழிப்பாதையில் முட்களை அகற்றும் போது 30 மூட்டைகளில் காலாவதியான சாக்லெடுக்கள், தின்பண்டங்கள் மருந்துகள் உட்பட பல பொருட்கள் வீசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

காலாவதியான இப்பொருட்கள் விஷத் தன்மை உடையது.  இவைகளை உட்கொள்ளும் ஆடு, மாடு உட்பட பல கால்நடைகள் உடல்நலம் பாதிக்கப்படும்.   இங்கு குழந்தைகள் விளயாட வருகின்றனர்.   அவர்கள் இதை உட்கொண்டால் உயிர் அபாயம் ஏற்படும்.    இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.    மாநகராட்சி உடனடியாக இவைகளை இங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என செய்தியாளர்களிடம்தெரிவித்துள்ளார்.

 

 

More articles

Latest article