மும்பை:

வங்க கடலில்  நிலை கொண்டிருந்த ஓகி புயல் கன்னியாகுமரியை புரட்டி போட்டது.

ஓகி புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி நகர்ந்ததால் தமிழகத்திற்கு புயல் ஆபத்து நீங்கியது. லட்சத்தீவில் கோர தாண்டவம் ஆடிய புயல் குஜராத் நோக்கி திரும்பியுள்ளது.

இதனால் வட மராட்டியம் மற்றும் தென் குஜராத் பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என மும்பை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக மும்பையில் கனமழை பெய்யக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை, தானே, சிந்துதுர்க், ராய்காட், ரத்னகிரி பால்கர், ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.