சென்னை,
தமிழக்ததில் ஓகி புயல் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமாரி மாவட்டம் ஒகி புயல் காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளானது. கடந்த 4 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அப்பகுதி முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளதாலும், ரோடுகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றுவதில் அரசு மெத்தனம் காட்டி வருவதால், மக்கள் வேறு இடத்துக்கு செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.
பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள். அவர்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்சி உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், வெள்ளம் வடியாத நிலையில், புயல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெள்ளப்பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில், பேரிடர் மீட்பு படை மற்றும் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.