சண்டிகர்,

மிழகம் மற்றும்  கேரளாவை கடுமையாக தாக்கி, பெரும சேதத்தை ஏற்படுத்தி உள்ள ஓகி புயல் நிவாரணமாக அரியான மாநில அரசு ரூ.2 கோடி ரூபாய் நிவாரணமாக அளித்துள்ளது.

அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டா 2 கோடி ரூபாயை ‘ஓகி’ புயல் நிவாரண நிதிக்காக பிரதமருக்கு அனுப்பினார்.

அரியானாவில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மனோர்லால் கட்டா இருந்து வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதுபோல, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களையும் காணவில்லை.

இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நிவாரண பணிகளும் இன்னும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஓகி புயல் நிவாரணமாக ரூ.2 கோடி ரூபாயை மத்திய அரசுக்க அனுப்பி உள்ளார் அரியானா முதல்வர்.