சேலம்
சேலம் இரும்பாலையில் ஹைதாராலிக் ஆயில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட டதில்  3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை  சேலம் இரும்பாலையில் திடீரென ஹைட்ராலிக் ஆயில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
பணியிலிருந்த சக தொழிலாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு இரும்பாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஆலையில் திடீரென ஹைட்ராலிக் ஆயில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 விபத்து குறித்து இரும்பாலை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.