சென்னை: கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தில், . வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட துறை அதிகாரிகளுடன் அமைச்சர்களுடன் ஆலோசனையில் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பருவமழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மக்களை முன்கூட்டியே பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.