
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். சினிமா மட்டுமின்றி, நடிகர் விஜய் சமூக நலத்திட்டங்களை அவரது மக்கள் இயக்கம் மூலமாக செய்து வருகிறார்.
அண்மையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதில் விஜய்க்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற கூறப்பட்ட நிலையில், பணையூர் இல்லத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
பல்வேறு ஊர்களுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் புகைப்படம், இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவை முறையான அனுமதி பெற்றே பயன்படுத்தப்பட வேண்டும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]