டில்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, கூட்டம் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி ஜனவரி 5-ம் தேதி வரை கூட்டத்தொடர் தொடர் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுவாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தில் 3-வது வாரத்தில் கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பெரும்பாலான கட்சியினர் அங்கு செல்வதால், கூட்டத்தொடர் தொடங்குவது தாமதம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது டிசம்பர் 15ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் உள்பட பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது