டெல்லி: மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் போது அவர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய மக்களவை தொகுதிக்குள் பணியாற்றாத வகையில் இடம் மாற்றம் செய்ய வேண்டும்  என அகில இந்திய தேர்தல் ஆணையம்  மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தின்  பதவிக் காலம், மே மாதம் நிறைவு பெறுவதால், அதற்கு முன்பே லோக்சபா தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.  இதைத்தொடர்ந்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வரும் தேர்தல் ஆணையம், தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தேர்தல் தொடர்பானஅறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.  அதன்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டு உள்ளது.  அரசு அதிகாரிகள் ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தால், தேர்தல் காலத்தில், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படு வர் என்பதால், ஒவ்வொரு தேர்தலின்போதும் தற்காலிக இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால்,  மாநில அரசுகளுக்கு, அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே  காவல்துறை மற்றும் நகராட்சி துறையின் கீழ் வருகின்ற, மாநிலத்தின் வெவ்வேறு நகராட்சிகள், டவுன்சபை, பேரூராட்சிகளில் புணிபுரியும், உயர் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய அதிகாரிகளையும் இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்படும் அதிகாரிகளி‘ல்,  லோக்சபா தேர்தல் பணிகள் முழுமையாக முடிந்த பின், முன்பு வகித்த இடத்தில் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில், போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்வதற்கு பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றன.