புது டெல்லி:
மத்திய அமைச்சர் டாக்டர் ஹரிஷ் வர்தனின் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி பிளாக்கில் உள்ள சுகாதார துறை அமைச்சரின் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டு இருந்தார்.
இவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, அந்த பாதுகாவலர் தனிமைப் படுத்தப்பட்டார். மேலும் அவர் பணியில் இருந்த அலுவலகம் மூடப்பட்டது.
இது குறித்து வெளியான தகவலில், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஒட்டு மொத்தமாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாவும், அவர்கள் அனைவரையும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அவர்களது ரத்த மாதிரிகளும் சோதனைக்காக எடுக்கப் பட்டுள்ளதகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் அம்பேத்கார் இன்ஸ்டிடியூட் ரோட்டரி கேன்சர் பிரிவில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த செவிலியரின் இரண்டு குழந்தைகள், கேன்சர் மையத்தின் டேகேர் மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை காவலர் மற்றும் செவிலியர் இருவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.
இதுமட்டுமின்றி கொரோனா பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் இருந்த டேகேர் மையத்தில் அந்த குழந்தைகளுடன் தொடர்பில் இருந்த பணியாளர்கள் அனைவரும் தங்களாகவே தங்களை தனிமைப் படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதனிடையே, ரெகார்ட் ரூம் பிரிவை சேர்ந்த 2 பேர், லேப் அட்டன்டர் மற்றும், எய்ம்ஸ் மருத்துவமனையின் கார்டியோ-நீரோ மையத்தை சேர்ந்த ஒருவர் என ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.