திருப்பூர்: திருப்பூர் பகுதியில் ஒடிசா பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பீகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் ஏராளன நெசவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ரூ.10 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான பல்வேறு துணிகள், ரெடிமேட் ஆடைகள், பனியன்கள், உள்ளாடைகள் என அனைத்து வகையான துணிகளும் நெசவு செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள ஆலைகளில் பணி செய்ய தேவையான அளவு தமிழர்கள் கிடைக்காத நிலையில், வட மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர். இதனால், இந்த மாவட்டங்களில் அவ்வப்போது சில அம்பாவிதங்களும் நடைபெற்று வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், வேலை தேடி குழந்தைகளுடன் ஈரோடு வந்த ஒரு ஒடிசா தம்பதியினரை ஒரு கும்பல் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. வேலைத்தேடி வந்து, திருப்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த தம்பதிக்கு, வேலைவாங்கி தருவதாகக் கூறிய சில பீகாரிகள், தங்கள் அ இக்கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர்.
பின்பு அந்த தம்பதியினரை அங்கிருந்து மிரட்டி வெளியில் அனுப்பியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த ஒடிசா பெண் தனது கணவர் மற்றும் குழந்தையோடு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த நதீம், டானிஷ், முர்சித் ஆகியோரை அவர்கள் தங்கியுள்ள அறையில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.