கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாங்கா ரயில் நிலையம் அருகே ரயில் தடம்புரண்டதில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது என்று ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறியுள்ளது.

ரயில்வே அதிகாரிகள் குழு நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிக்னல் கொடுக்கப்பட்டு, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்து சரக்கு ரயிலில் மோதியது.

ரயில் எண் 12841 ஷாலிமார்-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மெயின் லைன் வழியாகச் செல்வதற்காக சிக்னல் கொடுக்கப்பட்டு புறப்பட்டது பின்னர் அதற்கான சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளது ஆனால் இதற்கான காரணம் என்ன என்று அந்த அறிக்கையில் தெளிவாகக் கூறப்படவில்லை.

ஆனால், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், அருகில் உள்ள லூப் லைனுக்குள் நுழைந்து சரக்கு ரயில் மீது மோதி, தடம் புரண்டது. “இதற்கிடையில் ரயில் எண் 12864 (யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ்) டவுன் மெயின் லைன் வழியாக சென்றது, அதன் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது” என்று முதற்கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக “தி இந்து” தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.