புவனேஸ்வர்:
ஒடிஸா மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் பலியானது அதிர்ச்சியை அளித்துள்ளது.
3
ஒரிஸ்ஸா மாநில தலைநகர் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மடமடவென  தீ பிடித்தது. திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், நோயாளிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக 5 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் சுமார்  22 பேர் உயிரிழந்துள்ளதாக குர்தா மாவட்ட கலெக்டர் நிரஞ்சன் சாகு தெரிவித்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.