நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

1952ல் பராசக்தியும் 1972ல் அதிமுகவும் இதே அக்டோபர் 17ஆம் தேதி தான் ரிலீஸ் ஆச்சு..

நான்காண்டு சிறை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்ததும் இதே அக்டோபர் 17-இல் தான்.

பாடல்களால் இன்றுவரை நம்மை ஆட்டிப்படைக்கும் கவியரசு நம்மள தவிக்கவிட்டு கண்ணதாசன் மண்டையை போட்டதும் இதே 17ல்தான்..

போகட்டும் அதிமுக எஸ்டிடிக்கு வருவோம் .. 47 வருட கட்சி. சட்டமன்றபொது தேர்தலை சந்திக்க ஆரம்பித்து 42 ஆண்டுகள் ஆகின்றன..

இந்த 42-ல் 12 ஆண்டுகள் மட்டுமே எதிர்கட்சியான திமுக விடம் ஆட்சியை தந்துள்ளது.. இடையே சிலமாதங்கள் இரண்டு முறை கவர்னர் ஆட்சி.. மற்றபடி கோட்டையில் அதிமுக அரசுதான்..

எம்ஜிஆர்
ஜெயலலிதா
ஓ பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி

நான்கு முதலமைச்சர்கள்..

ஜானகி ராமச்சந்திரன் எங்கே என்று கேட்டால் அது ஒரு துன்பியல் சம்பவம் என்றே சொல்ல வேண்டும்..

ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் எம்ஜிஆருடன் எடுத்துக் கொண்ட படங்களை இதுவரை காண முடியவில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..

தொடர்ந்து 3 முறை.. தொடர்ந்து இரு முறை என ஆட்சியை பிடித்த வரலாறு.

நீதிமன்ற நடவடிக்கையால் முதலமைச்சர் என்கிற மகுடம் இருமுறை கழட்டப்பட்டது என்பதும் இந்த தேசம் காணாத வரலாறு

மக்களவையில் இரண்டு தேசியக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கிய மாநிலக் கட்சி என்ற சாதனை..

கூட்டி கழிச்சு பார்த்தா சக்சஸ் ஃபுல்லான கட்சி ..