காலத்தால் என்றும் அழியாத கவின்மிகுப் பாடல்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்தவர் ’கவியரசர்’ கண்ணதாசன். மங்காப்புகழ் கொண்ட அவரது 38 ஆவது நினைவு நாள் இன்று.

தான் வாழ்ந்த காலத்திலியே தன்னைப்பற்றி சுயசரிதை எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர் கவிஞர். பொதுவாக ஒருவர் இறந்தப்பிறகுதான் சுயசரியை எழுதப்படும். ஆனால்,  என்னைப் போல் எந்த மனிதனும் வாழ்ந்திட கூடாது என்று உரக்க சொல்லி, தனது வாழ்க்கை சுயசரியை எழுதியவர் அந்த மாபெரும் கவிஞர். அந்த புத்தகத்தில், ‘ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு என்னை விடச் சிறந்த உதாரணம் இருக்காது. அதனால் எனது சரிதம் மற்றவர்களுக்குப் பாடமாக அமையட்டும்’ என முன்னுரையிலேயே எழுதி, தான் யார் என்பதை இந்த உலகுக்கு வெளிப்படுத்தியவர்.

கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில்தான் நிலைகொண்டதில் மாற்றுக்கருத்து இல்லை. “தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்”. என்ற கண்ணதாசனின் வரிகள் மனித குலம் உள்ளவரை மாறாதது, மாற்ற முடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பெண்மையைப் போற்றி ஏராளமான பாடல்கள் எழுதிய கவிஞருக்கு இரண்டு மனைவிகள் பதினான்கு குழந்தைகள் உண்டு.  தனது விருப்படி வாழ்ந்த கவிஞருக்கு, அவரது கவித்திறனுக்கான நினைத்த அனைத்தும் அவருக்கு அமைந்தது. இதனால் தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகர்களை விட, கவிஞரின் மதிப்பு உயர்வாகவே காணப்பட்டது. ஒகோவென்று இருந்த காலத்தல், அவரது பாடலுக்காக தகவ கிடந்தோர் ஏராளம்… தமிழ் சினிமா தனது சிந்தனை மிகு பாடல்களாக கட்டிப்போட்டு வைத்திருந்த கண்ணதாசன், அப்போதைய பிரபல நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜியை விட அதிகம் சம்பாதித்த நிகழ்வுகளும் நடந்தது.

ஆனால், தனது இரக்க குணம் காரணமாக, தனது சம்பாத்தியத்தை மனம் போன போக்கில் செலவு செய்தார். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியவர், அதற்கு ஏற்றார்போல வாழ்ந்தும் நிரூபித்தார்.

4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதிய  கவிஞர் கண்ணதாசன் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றவர். தன்னம்பிக்கை, காதல் தோல்வி, விடாமுயற்சி, தந்தை மகள் பாசம், சோதனை, வேதனை, வறுமை, காதல், காமம், தெய்வ பக்தி, புரட்சி, துரோகம், கேலி, என அனைத்து விஷயங்கள் குறித்தும், தத்துவப் பாடல்களையும்  அவர் எழுதி இருக்கிறார்.  அவர்  எழுதிய பாடல்கள் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு தமிழர்களின் மனதில் ரீங்காரமிடும் என்பதில் ஐயமேதுமில்லை.

பத்திரிகையாளர், அரசியல்வாதி, திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பல அவதாரங்களை எடுத்தவர். ஆனால் அவருக்கு மிகவும் பிடித்த அவதாரம் கவிஞர் தான். தனது 35 வயதில் வீடு வரை உறவு வீதி வரை மனைவி’ போன்ற தத்துவப் பாடலை எழுதி உணர்ச்சிவசப்பட வைத்தார்.

கண்ணதாசனைப் போற்று வகையில் இந்திய அரசு அவரது உருவப்படம் பொறித்த ரூ.5 தபால்தலையை கடந்த 2013ம் ஆண்டு வெளியிட்டு மத்தியஅரசு கவுரவப்படுத்தியது.

தான் சாகும்போதும் தமிழ்ப்படித்து சாக வேண்டும், என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று இன்று பால் எழுதிய கவிஞரின் நினைவு தினம் இன்று… கவிஞர் கண்ணதாசனின் இழப்பு தமிழக எலுத்த உலகத்திற்கு மாபெரும் பேரிழிப்பு… அவர் மறைந்தாலும், இன்னும்… என்றும் அவரைது பாடல்கள் நமது செவிகளில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்….