சென்னை: இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு மீது உரியான விசாரணை செய்ய தமிழ்நாடு போலீசார் தயங்கினால், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிடுவோம் என உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறினார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் தமிழ்நாடு போலீசார் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்” என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையை கடுமையாகசாடியதுடன், எச்சரிக்கையும் செய்துள்ளது.
முன்னாள் திமுக அமைச்சர் பொன்மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி, இந்து மதத்தையும், பெண்களையும் பொன்முடி ஆபாசமாக விமர்சித்தார். இது தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பை கிளப்பியது. மேலும் பொன்முடியின் குடும்பத்தினருக்கும், அவரது கட்சி தலைவரின குடும்பத்துக்கும் இந்த ஆபாசம் பொருந்துமா என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 04) மீண்டும். விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ”தமிழகம் முழுவதும் பொன்முடி மீது 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும். அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும் என்று கூறியதுடன், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
[youtube-feed feed=1]பெண்கள் குறித்து அவதூறு: பொன்முடிமீது உயர்நீதிமன்றம் சுமோட்டோ வழக்கு பதிவு… காவல்துறைக்கு கண்டனம்