டில்லி

டாடா குழும தலைவர் ரத்தன் டாடா மீது பதிந்த இழப்பீடு வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் பாம்பே டையிங் தலைவர் நுஸ்லி வாடியா திரும்பப் பெற்றுள்ளார்.


கடந்த 2016 ஆம் ஆண்டு டாடா குழுமத் துணைக் குழுமமான ‘டாடா சன்ஸ்’ குழும நிறுவனங்களின் வாரிய இயக்குநர் பதவியிலிருந்து, நுஸ்லி வாடியா நீக்கப்பட்டார். இந்த நீக்கத்தை எதிர்த்து, டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா மற்றும் அந்த நிறுவனத்தின் வாரிய இயக்குநர்கள் மீது, நுஸ்லி வாடியா, மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  அத்துடன் டாடா நிறுவனம், தனக்கு, 3,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், தன் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நுஸ்லி வாடியாவின் மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவருடைய மேல் முறையிட்டு மனு, விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த விவகாரத்தில் ரத்தன் டாடா, நுஸ்லி வாடியா ஆகிய இருவரும் பேச்சு நடத்தி, இணக்கமான தீர்வு காண வேண்டும்’ என, நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

நேற்று அதாவது ஜனவரி 13 அன்று இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.   விசாரணையின் போது  நீதிபதிகள் , நுஸ்லி வாடியாவை அவமதிப்பதற்கு, தனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என, ரத்தன் டாடா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை மும்பை உயர் நீதிமன்றமும், தன் உத்தரவில் இதைத் தெரிவித்துள்ளது. ஆகவே, நுஸ்லி வாடியா, இந்த வழக்கை திரும்பப் பெறுவது குறித்து  பரிசீலிக்கலாம்.: எனக் கூறினர்.

நீதிபதிகள் கூறியதை அடுத்து, ரத்தன் டாடாவுக்கு எதிரான அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதாக, நுஸ்லி வாடியா தரப்பில் அவருடைய வழ்க்கறிஞர் சி ஏ சுந்தரம்  தெரிவித்தார்.தை அமர்வு ஏற்றுக் கொள்ளவே வாடியா பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அனுமதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தற்போது பாம்பே டையிங் நிறுவன தலைவராக நுஸ்லி வாடியா பணிபுரியும் நிலையில் இந்த முடிவின் மூலம் டாடா – பாம்பே டையிங் நிறுவனங்களுக்கு இடையில் நிலவிய பனிப்போர் விலகி உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.