கூவத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் பிரசவத்தின் போது செவிலியர் ஒருவர் குழந்தையின் தலையை பிய்த்துள்ளார்.

சென்னை ஆவடியில் தியாகராஜன் – பொம்மி தம்பதியர் வசித்து வருகின்றனர். நிறை மாத கர்ப்பிணியான பொம்மி பிரசவத்துக்காக தனது தாய் விடான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடந்த 19 ஆம் தேதி அன்று காலை கூவத்தூருக்கு சென்றுள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கூவத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டார்.

பொம்மி

அப்போது அங்கு மருத்துவர் இல்லை என்பதால் அங்கிருந்த செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். செவிலியர் பிரசவம் பார்ப்பதற்கு பொம்மியின் தாய் முனியம்மாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானப் படுத்தி உள்ளனர்.

பிரசவத்தின் போது செவிலியர் குழந்தையின் தலையை பிடித்து இழுத்துள்ளார். அதனால் குழந்தையின் தலை பிய்ந்து வந்துள்ளது. உடல் மட்டும் பொம்மியின் வயிற்றில் இருந்துள்ளது. உடனடியாக பொம்மி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை நடத்தி குழந்தையின் தலையற்ற உடலை வெளியே எடுத்துள்ளனர்.

பொம்மியின் இல்லம் உள்ள கல்பாக்கம் அருகில் இருக்கும் கடலூர் காலனியில் வசிக்கின்ற அக்கம் பக்கம் உள்ளவர்களும், உறவினர்களும் செங்கல்பட்டு மருத்துவ மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ள்னர்.