மைனருடன் நர்சு ஓட்டம்… உயர் நீதிமன்றம் வேதனை

Must read

 
மதுரை: 
ஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை  மறவர்காட்டை சேர்ந்தவர் சுபத்ரா(20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் மருத்துவமனை நர்சு. இவர் அதேபகுதியை சேர்ந்த 17 வயது மைனர் சிறுவனை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டார்.
இதுகுறித்து மதுக்கூர் போலீசார் சுபத்ரா, இவரது தந்தை, தாய்  மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு 3 பேரும்  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் கூறுகையில்….

தற்போது பெண்களே தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வசீகரத்தால் சிறுவன் என்று கூட பார்க்காமல் செல்லும் நிலை உள்ளது. வேதங்களில் குறிப்பிடும் கலிகாலத்தையே இது காட்டுகிறது. பெண்களை கூட்டிக்கொண்டு ஆண்கள் சென்ற நிலை மாறி, ஆண்களை, பெண்கள் கூட்டி செல்லும் நிலை வந்துவிட்டது.
தற்போது புகை பிடிப்பது, மது அருந்தும் பெண்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.
எனவே, 3 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்…. என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 

More articles

Latest article