ஹார்வர்டு பல்கலை..யில் தமிழ் இருக்கை அமைய 1 லட்சம் டாலர் நிதியுதவி: சேலம் திரிவேணி குழுமம் வழங்கல்

Must read

 
வாஷிங்டன்: 
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு, சேலம் திரிவேணி குழுமம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்குகிறது.
டாக்டர் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சம்பந்தன் தலா 500 ஆயிரம் டாலர்கள் நன்கொடை வழங்கி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கை அமைக்க முயற்சி எடுத்துள்ளனர். அவர்களுக்கு உதவியாக  பல தமிழ் அமைப்புகளும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டுகின்றன.

தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் இந்தப் பணியில் சேலத்தை சேர்ந்த திரிவேணி குழுமம் ஈடுபட்டுள்ளது. 1 லட்சம் டாலர்கள் நன்கொடை வழங்கிய முதல் தொழில் நிறுவனம் என்ற பெருமையைப் இது பெற்றுள்ளது.
சேலம் டூ ஹார்வர்டு திரிவேணி குழுமத்தின் செயல் இயக்குனர் கார்த்திகேயன்,‘‘ ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.  ஹார்வர்ட் தமிழ் இருக்கை குறித்த தகவல்களை தெரிந்து, உரியவர்களைத் தொடர்பு கொண்டோம். அனைத்து விவரங்களையும் கேட்ட பிறகு நிதியுதவி செய்தோம். தமிழ் மொழிக்கு உலக அளவில் சிறப்பு சேர்க்கும் இந்த உன்னத முயற்சியில் எங்கள் நிறுவனமும் இணைந்தது பெருமையக இருக்கிறது.
தமிழ் மொழிக்காக இந்த அரிய முயற்சியை மேற்கொண்டுள்ள டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்மந்தன் மற்றும் உதவியாக செயல்படும் தமிழ் அமைப்புகள், தன்னார்வலர்களுக்கு  வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.1 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியை சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட முறையில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்றார்.

More articles

Latest article