சென்னை: நூபுர் சர்மா விவகாரத்தில், சர்ச்சைக்குரிய வகையில்  கியான்வாபி மசூதி தொடர்பாக விவாதம் நடத்திய டைம்ஸ்நவ் ஊடகத்துக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவாதங்களை நடத்திய ஊடகவியலாளர் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறியது.

சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்களில் ‘டிபேட்’ என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி, அதனால், நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வு, சர்ச்சைகளை ஏற்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஊடகங்கள், தங்களின் வளர்ச்சிக்காக இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்பி நாடு மற்றும் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை குலைக்கும் செயல்களால் பல சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதுபோலத்தான் விவாதம் என்ற பெயரில், விவாதத்தை நடத்துபவர், சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி, அதுதொடர்பான விவாதத்தில் பேசுபவர்கள், கேள்விக்கு பதில் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய வகையில் பதில் கூறுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால், மதம், இனம் சார்பாக பிரச்சினைகள் ஏற்படுகிறது.

அதுபோலத்தான் கியான்வாபி மசூதி டிபேட்டின்போது, ஊடகவியலாளரின் சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் தெரிவித்து, நூபுர் சர்மா பேசியது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், வன்முறைக்களமாகவும் மாறியது, அப்பாவி ஒருவர் முஸ்லிம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டு உள்ளார்.

இந்த நிலையில், நூபுர் சர்மா வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அவரை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டதுடன், இந்த விவகாரம் குறித்து விவாதம் (டிபேட்) நடத்திய டைம்ஸ் நவ் (Times Now) தொலைக்காட்சியையும் கடுமையாக சாடியுள்ளது.

கியான்வாபி மசூதி குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் லைமை ஆசிரியர் நவிகா குமார் தொகுத்து வழங்கிய விவாதத்திற்காக, அவரை கடுமையாக சாடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஒரு நிகழ்ச்சி நிரலை விளம்பரப்படுத்துவதைத் தவிர,  நீதித்துறை சார்ந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பதுதான்  டிவி சேனலின் வேலையா என்ன?” என கேள்வி எழுப்பியது.

“எங்களை வாயைத் திறக்க வேண்டும் என நினைக்கிறிர்களா? தொலைக்காட்சி விவாதம் எதற்காக? ஒரு நிகழ்ச்சி நிரலை எப்படி நடத்த வேண்டும் என  தெரியாதா? என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், இந்த விஷயத்தில்,  இஸ்லாம் மற்றும் நபி பற்றிய நூபுரின் கருத்துக்கள் சக குழு உறுப்பினரும் தொகுப்பாளருமான விவாதத்தை நடத்திய  நவிகா குமார் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்று விமர்சித்ததுடன், 

“விவாதத்தை தவறாகப் பயன்படுத்தினால், அவர் முதலில் செய்திருக்க வேண்டியது தொகுப்பாளர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்வதாகும்” என்று நீதிபதி பர்திவாலாவுடன் விடுமுறை பெஞ்சில் ஒரு பகுதியாக இருந்த நீதிபதி சூர்யா காந்த் காட்டமாக தெரிவித்தார்.

ஒரு பத்திரிகையாளர் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் தங்கள் உரிமைகளை வெளிப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டிபேட்டின்போது, விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல்  பொறுப்பற்ற முறையில் மற்றவர்களைக் குறை கூறுவது, அறிக்கைகள் விடுவது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டிது என்று கடுமையாக சாடியதுடன், 

இது ஊடகவியலாளர் சுதந்திரம் என  கூறுவதை ஏற்க முடியாது,  “ஒரு ஊடகவியலாளரின் சுதந்திரத்தை, தொலைக்காட்சியில் அறிக்கை களை வெளியிடும் மற்றும் நாடு முழுவதும் உணர்ச்சிகளைத் தூண்டும் அரசியல் செய்தித் தொடர்பாளரின் சுதந்திரத்துடன் ஒப்பிட முடியாது” என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

தொலைக்காட்சிகள் மதச்சார்பின்மைக்கான தேசத்தின் அரசியலமைப்பு அர்ப்பணிப்பு மற்றும் பத்திரிகை நெறிமுறைகள்,  வழிகாட்டுதல்களை கையாள வேண்டும் என்றும்,  இந்திய பத்திரிகை நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கையாள்வதில் கவனம் செலுத்தியிருந்தால், நாட்டிற்கு தேவையற்ற அவமானத்தை ஏற்படுத்திய சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால்,  மாறாக, இந்த சேனல்களில் சில பார்வை யாளர்கள் மற்றும் லாபத்தை அதிகரிக்கும் விருப்பத்தால் இதுபோன்ற வன்முறை தூண்டும் வகையிலான டிபேட்டுகளை நடத்துகின்றன என்றும் கூறியது.யில் பார்க்கிறார்கள்.