கடந்த 2016 ஜூன் 24-ம் தேதியன்று சுவாதி எனும் இளம்பெண்ணை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம் குமாரை கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம் குமார் அதே ஆண்டு செப்.18 அன்று மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் அறிவித்தனர்.
இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘நுங்கம்பாக்கம்’ .இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.