மதுரை:
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் கன்னியாஸ்திரி ஒருவர், சீருடையுடன் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த இந்து அமைப்பினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை கன்னியாஸ்திரி ஒருவர், மூலஸ்தானம் வரைக்கும் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அனுமன் சேனா அமைப்பின் மதுரை மாவட்ட தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் விரைந்து வந்து கன்னியாஸ்திரியை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய நிலையில், நிர்வாகம் தரப்பில் பதில் தெரிவிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் பாதுகாப்பு கருதி வழிப்பாட்டு தளங்களில்வ கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையின் பாதுகாப்பை மீறி கன்னியாஸ்திரி உடையில் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, அந்த கன்னியாஸ்திரியிடம் விசரணை நடத்தினர். இந்த சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
-பொதிகை குமார்