
இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்த லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கட்சியின் புதிய போர்டை திறந்துவைத்தார்.
அதில் வழக்கமாக இருக்கும், “லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்” என்பதற்கு பதிலாக “இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம்” என்று இருந்தது.
மேலும் அதில் டி.ராஜேந்தர் படம் பெரிதாகவும் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் படம் சிறிய அளவிலும் இருந்தது.

எண் கணிதத்தில் (நியூமராலஜி) தீவிர நம்பிக்கை உள்ள டி.ராஜேந்தர், அதன்படியே லட்சிய என்பதற்கு முன் இ என்ற எழுத்தைச் சேர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே தனது பெயரான டி.ராஜேந்தர் என்பதை விஜய டி.ராஜேந்தர் என்றும் பிறகு டி.ஆர் . என்றும் பலவகையாக மாற்றிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]