மால்கம் வருகை!! ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

Must read

டெல்லி:

ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்தியா வந்துள்ளார். அவருடன் அந்நாட்டு கல்வி அமைச்சர் சைமன் பிர்மிங்காம் தலைமையில் 120 கல்வியாளர்களும் வந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் பயில்கின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் நோக்கத்தோடு இந்த கல்வியாளர் குழு வருகை தந்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் கல்வி பயில இந்திய மாணவர்கள் அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். ஆனால் தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள விசா முறை மாற்றங்களால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் இந்திய மாணவர்களை ஆஸ்திரேலியா பக்கம் ஈர்க்கும் திட்டமும் இதில் அடங்கியுள்ளது.

உயர்கல்வி, பள்ளி துறை, வொகேஷனல் பிரிவு கல்வி பயில இந்திய மாணவர்களின் தேர்வு செய்வதில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபேர் பேக்ஸ் மீடியாவின் தகவல் படி கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

வளர்ந்து வரும் ஆஸ்திரேலிய கல்வி துறையில் கட்நத 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் இந்திய மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை தொடர்ந்து மாணவர் சேர்க்கை பாதியாக குறைந்தது. அதன் பிறகு இது போன்ற தாக்குதல் நடக்கவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய வெளியுறவு விவகாரங்களுக்கான இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஜெய்தீப் மசும்தார் கூறுகையில்,‘‘ மாணவர் தாக்குதல் விவகாரத்தை நாங்கள் எடுத்துச் சென்றபோது ஆஸ்திரேலிய அரசு மிகவும் அக்கறையுடன் செயல்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தற்போது இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக இ ந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் ஆஸ்திரேலியாவுக்கு ஆதாயத்தை ஏற்படுத்தும். பிர்மிங்காம் கூறுகையில், ‘‘ இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் பயில விரும்புவதில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் இருப்பது பெருமை அளிக்கிறது.

கட்நத ஆண்டு மட்டும் 78 ஆயிரம் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதன் மூலம் 2 மில்லியன் டாலர் பொருளாதார பங்களிப்பை வழங்கியுள்ளது. 2022ம் ஆண்டில் 400 மில்லியன் இந்தியர்களை திறன் மி க்கவர்களாக உருவாக்கும் இந்திய அரசின் நோக்கத்திற்கு ஆஸ்திரேலியாக உதவியாக இருக்கும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ தரமான உயர் கல்வியை பயில ஆஸ்திரேலியாவை தேர்வு செய்யும் இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக விளங்கும். இந்தியாவுடன் கல்வி தொடர்பான உறவுகளை மேம்ப டுத்தவே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

More articles

Latest article