சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55% க்கும் அதிகமானோர் ஜூன் 2 ம் தேதி நிலவரப்படி அதில் இருந்து மீண்டுள்ளனர்.

மே 8ம் தேதிக்கு முன்பாக, அனைத்து கொரோனா நோயாளிகளும் அனுப்பப்படுவதற்கு முன்பு 24 மணி நேரத்திற்குள் 2 முறை நெகட்டிவ் இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் அதன் பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மே 1 முதல் மே 29ம் தேதி வரையான கொரோனா தொற்றுகள், புள்ளி விவரங்களை பார்த்தால் ஒரு முக்கியமான விஷயத்தை அறியலாம். சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தான் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 78 சதவீதமாக இருந்தது.

மே 1 அன்று, சென்னையில் டிஸ்4சார்ஜ் விகிதம் 20.5% ஆக இருந்தது. 1,082 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றுகள் இருந்தன. அடுத்த வாரத்தில், சராசரியாக ஒரு நாளைக்கு 22 நபர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மே 5 அன்று, 52 பேர் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டனர்.

மே 8 க்குள், சென்னையின் டிஸ்சார்ஜ் விகிதம் முந்தைய வாரத்திலிருந்து 12.29% ஆகக் குறைந்தது. கோயம்பேடு சந்தைக் கொத்து காரணமாக பாதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து 3,043 ஆக இருந்தது.

டிஸ்ஜார்ஜ் வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்ட பின்னர், மே 9 அன்று சென்னையில் ஒரே நாளில் 171 பேர் அனுப்பப்பட்டனர். மே 9 முதல் மே 15 வரை சராசரியாக 58 பேர் குணமாகினர். இது முந்தைய வாரத்தை விட இரு மடங்கு அதிகமாகும்.

மே 22 க்குள், சென்னையின் டிஸ்ஜார்ஜ் விகிதம் 40.29% ஆக உயர்ந்தது. மே 23 முதல் மே 29 வரை, ஒரு நாளைக்கு சராசரியாக 446 நபர்கள் அனுப்பப்பட்டனர். மே 29 அன்று, சென்னையில் மொத்தம் 13,362 தொற்றுகள் இருந்தன. மே 22 ல் இருந்து 29.92% அதிகரித்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த டிஸ்ஜார்ஜ் வீதமும் 51.60% ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களும் பெரும்பாலும் இதேபோன்று இருந்தன. செங்கல்பட்டு (55.81%), காஞ்சீபுரம் (32.14%) மற்றும் திருவள்ளூர் (72.13%) அனைத்தும் மே 1 ம் தேதி டிஸ்ஜார்ஜ் விகிதங்களை பதிவு செய்துள்ளன.  ஆனால் கோயம்பேடு பாதிப்பால் மே 8க்குள் இந்த விகிதத்தில் பெரும் சரிவு காணப்பட்டது.

ஆனால் டிஸ்ஜார்ஜ் வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டதால் அதன் சதவீதமும் அதிகரித்தது. மே 29க்குள் 44.3 சதவீதமாக இருந்தது. மே 29 அன்று, காஞ்சிபுரம் டிஸ்ஜார்ஜ் விகிதம் 57.37% ஆகவும், திருவள்ளூர் 60.88% ஆகவும் இருந்தது. திருவள்ளூர் மே 1 முதல் மே 8 வரை ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று நபர்களை டிஸ்ஜார்ஜ் செய்வதிலிருந்து மே 23 முதல் மே 29 வரை 41 நபர்கள் சராசரியாக அனுப்பப்பட்டனர்.

ஆனால் இது குறித்து மாறுபட்ட கருத்தை தெரிவிக்கிறார் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜேக்கப் ஜான். அவர் கூறி இருப்பதாவது: நீங்கள் குணமாகிவிட்டீகள் என்பதற்கு சோதனைகள் தேவையில்லை. அவை அறிகுறிகளாக மாறும்போது, ​​சில நாட்களில் நெகட்டிவ்வாக இருக்கும். நீங்கள் அதை நிரூபிக்க வேண்டியதில்லை என்கிறார்.

இருப்பினும், வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்த வீடுகளில் தனிமைப்படுத்தல் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.