சென்னை: தமிழகத்தில் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளதாகவும், குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் அதிக அளவில் குழந்தைகள் திருமணம் நடைபெற்று இருப்பதாகவும், சுமார்  40 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும்  குழந்தை உரிமைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று  தடுப்பு நடவடிக்கை காரணமாக மத்திய, மாநில அரசுகள் முடக்கங்களை அறிவித்துள்ளதுடன், கல்வி நிலையங்களும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூடிக்கிடப்பதால்,  மாணவ மாணவிகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இது போன்ற சூழ்நிலையை பயன்படுத்தி, பெற்றோர்கள் வளரிளம் பருவ பெண்களை திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நமது அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகா போன்றவற்றில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் குழந்தை திருமணம் அதிகரித்து உள்ள நிலையில்,  தமிழகத்திலும் இது போன்ற புகார்கள் குவிந்த நிலையில், தமிழக தன்னார்வ குழந்தைகள் உரிமை நிறுவனமான சி.ஆர்.ஒய் (CRY), இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் ஆய்வு முடிவு  வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், 2020ம் ஆண்டு மே மாதத்தில் 40% குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கைஎண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்து உள்ளது. குறிப்பிக சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், மற்றும் திண்டுக்கல் (கொடைக்கானல்) மாவட்டங்களில் உள்ள பழங்குடி குக்கிராமங்களில் குழந்தை திருமணம் பரவலாக உள்ளது என்றும், இந்த பகுதிகளில் மட்டும் மட்டும் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. சேலம், தருமபுரி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 72 கிராமங்களில் இந்த புகார் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டத்தில் மட்டும்  60 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளது தெரிய வ்ந்துள்தாகவும், இது கடந்த ஆண்டு (2020)  மே மாதத்தில்  98 ஆக உயர்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம்  சுமார் 150 குழந்தைத் திருமணங்களும்,  2020 மே மாதத்தில் 192 திருமணங்களும் நடந்துள்ளன.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 19 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளில் 8.69 சதவீதப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தருமபுரியில் 11.1 சதவீதமும் சேலத்தில் 10.9 சதவீதமும் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

கொரோனா தொற்று காலம் என்பதால்  பெரும்பாலான கல்வி மையங்கள் மூடப்பட்டுள்ளன தொலைதூரக் குழந்தைகளுக்கு எந்தக் கல்வியும் இல்லாததாலும், எளிய குடும்பங்களுக்குப் போதிய வளங்கள் இல்லாததாலும் ஆணாதிக்க மனநிலையாலும் குழந்தைகளின் மீதான உரிமை மீறல்கள் அதிகமாகியுள்ளன என தெரிவித்து உள்ளது.

கோவிட் தொற்றுத் தடுப்பை நிர்வகித்து வரும் அரசாங்கம், அதே வேளையில் குழந்தைத் திருமணப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு கிராமப்புறக் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவை பலப்படுத்துவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தனி முயற்சியாக அல்லாமல், ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்த மே மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகமாக உள்ளதால், மேலும் அதிகமான குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கை செய்துள்ளதுடன்,  கொரோனா முடக்கம் நீட்டிக்கப்பட்டு வருவதால்,  இந்த ஆண்டும், குழந்தைகள் திருமணம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதை அரசு சரியான நேரத்தில் தலையிட்டு, தடுக்காவிட்டால், சமூகத்தில்  பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.