தக்கலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சட்ட விரோதமாக உடைத்து கனிம வளங்களைக் கேரளாவிற்குக் கடத்துவதைக் கண்டித்து தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய யூ டியூபர் சாட்டை துரைமுருகன், தமிழக முதலமைச்சர் குறித்துத் தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துகளைத் தெரிவித்தார். மேலும் அவர் தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசினார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது
இந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று கைது செய்யப்பட்டு பத்மநாபபுரம் ஜூடிசியல் நீதிபதி தீன தயாளன் முன் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி அவரை வரும் 25 – ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு இட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நாங்குநேரி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.