சென்னை
வரும் 2026 ஆம் வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வேதாரண்யம் தொகுதி வேட்பாலரை நா தக அறிவித்துள்ளது/
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதில் இருந்தே கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் பேசத் தொடங்கிவிட்டன. அதன்படி தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண உள்ளனர். இவற்றில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கிட்டத்தட்ட கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதே வேளையில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அரசியலில் களம் கண்டு முதல் தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் தற்போது வரை தனித்து போட்டியிடும் சூழலில் தான் உள்ளது.
இன்று 2026 ஆம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். நாளைய தினம் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி அறிமுகப்படுத்தப்பட உள்ளார்