“நீட்” மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து தற்போது பேச முடியாது!:  டாக்டர் கிருஷ்ணசாமி

Must read

 

சென்னை: நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவி அனிதாவின் தற்கொலை முடிவு தவறான ஒன்று என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், அனிதா ஏன் செத்தார் என்பதை விசாரிக்க வேண்டும் ,இந்த மர்ம சாவை ஏன் நீட்டோடு ஒப்பிடவேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். தவிர,

தற்கொலைக்கான காரணம் தெரியாமலேயே அது வேறு ஒன்றுடன் முடிச்சுப்போடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்து குறித்து மேலும் விளக்கம் அறிய அவரைத் தொடர்புகொண்டோம். அவர், தற்போது   பேச இயலாது. மீண்டும் பேசுவோம் என்றார்.   அவரது பேட்டி விரைவில் வெளியிடப்படும்.

 

More articles

Latest article