நோன்பு காலத்தில் பாரீஸ் நாட்ரிடாம் தேவாலயம் தீ விபத்து! கிறிஸ்தவர்கள் சோகம்….

நெட்டிசன்:

பாரீஸ் நாட்ரிடாம் கதீட்ரலில் ஏற்பட்ட தீவிபத்து பிரான்ஸில் உள்ள கிறிஸ்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புனித வெள்ளி நெருங்கும் நிலையில் நடந்துள்ள இந்த தீவிபத்தால் அவர்கள் சென்டிமென்டலாக வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கதீட்ரல்தான் நாட்ரிடாம் கதீட்ரல். பாரீஸ் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் விரும்பி வரும் ஒரு தலமாக வும் உள்ளது. மிக மிக பழமையான இந்த கதீட்ரலில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையின்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இது மிகவும் துயர் மிக்கதாக மாறியுள்ளது.

திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் கதீட்ரல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த கதீட்ரலின் விசேஷமே இதன் கோதிக் கலைப் படைப்புகள்தான். கட்டட வடிவமைப்பும், கட்டடத்திற்குள் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓவியங்களும், இதர கலைப்படைப்புகளும் கிட்டத்தட்ட பொக்கிஷம் போல பல காலமாக திகழ்ந்து வருகின்றன.

பாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீவிபத்து #மிகவும் பழமையானதுஇப்படிப்பட்ட மிகத் தொன்மை வாய்ந்த கலைப்படைப்புகள் தற்போது தீயில் கருகிப் போய் விட்டதால் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். மீண்டும் உருவாக்க முடியாத அளவிலான சிறப்பு கொண்டவை இந்த கலைப் பொக்கிஷங்கள் என்பதால் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுமே வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து,  நியூயார்க்கைச் சேர்ந்த பாதிரியார் ஜேம்ஸ் மார்ட்டின் என்பவர் கூறுகையில், என்னால் தீவிபத்து வீடியோவைப் பார்க்க முடியவில்லை. மனம் உடைந்து போய் விட்டேன். மிகவும் சோகமான நாள் இது என்றார்.

வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிக்காவுக்கு அடுத்து மிகப் பழமையானது, மிகப் பெருமையானது, மிகுந்த கலைத்துவம் மிக்க கதீட்ரல் நாட்ரிடாம் கதீட்ரல்தான். வாடிகன் சிட்டிக்கு அடுத்து கத்தோலிக்கர்கள் அதிகம் வருவதும் நாட்ரிடாம் கதீட்ரலுக்குத்தான். பாரீஸுக்கு வரும் யாருமே இங்கு போகாமல் இருக்க மாட்டார்கள் என்றார் ஜேம்ஸ் மார்ட்டின்.

இயேசுநாதரின் முள் கிரீடம்நாட்ரிடாம் கதீட்ரல், வழக்கமான சர்ச் கிடையாது. அதாவது அந்தந்த சர்ச்சுக்குரியவர்கள் மட்டும் தினசரி வந்து வழிபட்டுச் செல்லும் சர்ச் கிடையாது. இங்கு முக்கிய சமயங்களில் மட்டுமே முக்கியமான கலைப் பொக்கிஷங்கள் அடங்கிய பகுதிகள் அனைவருக்கும் திறந்து விடப்படும். நீண்ட காலமாக இது வழிபாட்டுத் தலமாக இல்லாமல் இருந்தது.

காரணம், இதன் பழமைக்கு பங்கம் வந்து விடக் கூடாது என்பதால். இங்குள்ள ஒரு முக்கியமான கலைப் படைப்பு புனித முள் கிரீடம் ஆகும். இது இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது தலையில் சூடப்பட்டிருந்த முள் கிரீடம் என்று கூறப்படுகிறது.சிலுவையும், ஆணியும்இந்த முள் கிரீடம் கடந்த 16 நூற்றாண்டுகளாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளதாம்.

கோடிக்கணக்கானோர் இதுவரை இந்த முள் கிரீடத்தை தரிசித்து வழிபட்டுள்ளனர். மேலும் இயேசுநாதர் சுமந்து சென்ற சிலுவையின் ஒரு மரத் துண்டும் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிலுவையில்தான் இயேசுநாதர் அறையப்பட்டார். அதன் துண்டுதான் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இயேசுநாதரை சிலுவையில் அறைய பயன்படுத்தப்பட்ட ஆணிகளில் ஒன்றும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆணி எங்கிருந்து வந்தது தெரியுமா.. ஜெருசலேசத்தில் இயேசுநாதர் அடக்கம் செய்யப்பட்ட இடமான புனித ஸெபலுச்சர் என்ற இடத்திலிருந்து எடுத்து வந்து இங்கு பாதுகாத்து வந்துள்ளனர். கிபி 799ம் ஆண்டு இந்த ஆணியை ஜெருசலேமைச் சேர்ந்த மக்கள் பிரெஞ்சு சக்கரவர்த்தி சார்ல்மேனிடம் கொடுத்துள்ளதாக இங்குள்ள தல வரலாறு கூறுகிறது.

தற்போது இந்த பொருட்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்பது கவலைகளை ஏற்படுத்தி யுள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின்போது இந்த கதீட்ரலும் தாக்குதலுக்குள்ளானது. ஆனால் பல முக்கியப் பகுதிகள் காப்பாற்றப்பட்டன. அன்று முதல் இது பாரீஸ் ஆர்ச்பிஷப் வசமே இருந்து வருகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Christians are sad, fasting period, Notre-Dame cathedral
-=-