சென்னை:

மண்ணடி பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த விஜி என்பவர் இன்று மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விஜி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில்  இருக்கின்றன.

இந்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் ரவுடி விஜி ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் இன்று ஆஜரானார். பிறகு மாலை பவளக்காரத் தெருவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் துரத்தியது. அவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற விஜி வீடு ஒன்றில் புகுந்தார். அப்போதும் அவரை விடாமல் விரட்டிச்சென்ற மர்ம  கும்பல் விஜியை சரமாரியாக வெட்டியது. பிறகு தப்பிச் சென்றது.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த விஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

விஜியை மர்ம கும்பல் விரட்டி வெட்டிய  காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கின்றது.  இந்த காட்சிகளை வைத்து கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

[youtube-feed feed=1]