சென்னை: சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சொந்த வீடு  வைத்துள்ளவர்கள், சொத்து வரி செலுத்த வேண்டியது கட்டாயம். அதன்படி ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.  சென்னையில் வசிப்பவர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி சொந்து வரியை வசூலித்து வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது  மொபைல் மெசேஜ்கள் மூலமும் நினைவூட்டி வருகிறது. மேலும் தாமதமாக செலுத்துபவர்களிடம் அபராததுடன் வரி வசூலித்து வருகிறது.

இந்த நிலையில்,  முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ் அனுப்பும் நடவடிகைகளில் மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது. அதன்படி,  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  சொத்துவரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

அதன்படி,  சொத்துவரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து வரியை செலுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.