சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம்  வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை  தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், \ எஸ்.ஐ.ஆர்-க்கு பின் தமிழ்நாட்டில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி இதுவரை 7.28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயரை நீக்கக் கோரி 9,410 பேர் மனு அளித்துள்ளனர். இந்த படிவங்களை வழங்க ஜனவரி 18-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 12 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, கூடுதல் ஆவணங்கள் கோரியுள்ளது;  இதையடுத்து தமிழ்நாடு அரச, நிரந்தர குடியிருப்பு சான்றிதழுக்கு கட்டண விலக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எஸ் ஐ ஆர் பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 ஆம் தேதி உடன் முடிவடைந்தது. வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இரட்டை பதிவு, கண்டறிய முடியாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் வழங்கப்பட்ட படிவங்களில் வாக்காளர்கள் தங்களுடைய பெயரோ அல்லது உறவினர்கள் பெயர்கள் 2002 மற்றும் 2005‌ ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தால் அந்தத் தகவல்களை படிவங்களில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் 2002 மற்றும் 2005 அப்போதைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த உறவினர்கள் பெயரை குறிப்பிடாத சுமார் பத்து லட்சம் வாக்காளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

எஸ்.ஐ.ஆர்-க்கு பின் தமிழ்நாட்டில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. எஸ்.ஐ.ஆர் படிவத்தில் 2002, 2005-ல் சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவர்களின் உறவினர்களின் பெயர் குறித்த விவரங்களை தராத வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 13 ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]