மோடி ஏற்படுத்திய போருளாதார பேரழிவு – நோட்டுத் தடை என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்ததே. கடந்த 2016ம் ஆண்டு இதே நாள் இந்திய பிரதமர் மோடியால் முன்யோசனை மற்றும் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்ட உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1000 தடை செய்யப்பட்டது, பொதுமக்களிடையே சொல்லோனா துயரத்தை ஏற்படுத்தியது.
கருப்பு பணத்தை மீட்கப்போவதாகவும், ரூபாய் நோட்டை சாராத இந்திய பொருளாதாரத்தை நோக்கி செல்ல இந்த நடவடிக்கை உதவும் என கூறிய பிரதமர் மோடி, பின்னர், தான் எதிர்பார்த்தபடி, இல்லாமல், வங்கிகளிடம் வந்தடையும் பழைய ரூபாய் தாள்கள் அரசு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், அரசு புதிய கருத்தை கூற தொடங்கியது. “டிஜிட்டல் இந்தியாவை” உருவாக்கவே இந்த முயற்சி என்று பின்னர் இந்திய அரசு கூறியது.
ஆனால், பிரதமர் மோடி தான்தோன்றித்தனமாக அறிவித்த டிமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பால் மக்களுக்கு கிடைத்தது என்ன? மோடியின் கூற்று நிறைவேறியதா? என்றால் நத்திங். அதற்கு பதிலாக நாடு கடுமையான பொருளாதார பேரழிவை சந்தித்ததுடன், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட உணவுக்கே அல்லப்பட்ட நிலையை உருவாக்கியது. இதுமட்டுமின்றி, பணநோட்டு பரிமாற்றத்தையே அதிகமாக நம்பியிருந்த ஏழை மக்களையும், கிராம சமூகங்களையும் இது மிகவும் மோசமாக பாதித்தது. பல ஆயிரம் உயிர்களை பலி கொண்டது என்பதே உண்மை.
மோடியின் பணமதிப்பிழப்பு அதனால் ஏற்பட்ட தாக்கம் என்ன என்பதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி, இந்திய பொருளாதாரத்தின் மீது ஒரு தாக்குதல் என்ற பெயரில் புத்தகம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவரும், ராஜீவ்காந்தி வாழப்பாடி கே.ராமமூர்த்தி சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனருமான வாழப்பாடி இராம. சுகந்தன் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் திட்ட செயலாக்க கமிட்டி வெளியிட்டுள்ளது.