தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி ஆகியவற்றுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதுபோல, சிறப்பு ஒதுக்கீடு ரோஸ்டர் முறையிலும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறையை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றுசென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்குகளும் தள்ளுபடி, உயர்நீதி மன்றம் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தமிழகஅரசு, கடந்த 2016- ம் ஆண்டு, அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி வழங்குவதற்கு வழிவகை செய்தது.
இந்த சட்டத்தை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகஅரசின் சட்டம், மற்றும் அதன் விதிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என கடந்த ஆண்டு (2019) நவம்பரில் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா தமர்வு மனுவை தள்ளுபடி செய்வதாக ஜூலை மாதம் 6- ம் தேதி உத்தரவிட்டது.
தொடர்ந்து, தமிழக அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க அனுமதிக்கக் கோரி மீண்ம் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியதுடன், தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.