சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் தானும் போட்டியிட போவதாக திரைப்பட இயக்குனர் அமீர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அமீர் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘நான் போட்டியிடப்போவதில்லை. என்னுடைய அரசியல் பயணம் என்பது சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து போரிடுவதும் ஆட்சியாளர்களின் அக்கிரமத்தை எடுத்துரைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே அன்றி இப்போது ஒரு நடிகரை எதிர்த்து அல்ல’’ என்றார்.